Wednesday, May 15, 2013

டெல்லி அணியை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 64-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய மோரிஸ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அல்பி மோர்கல் சேர்க்கப்பட்டார்.
ஹசி- விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஹசி 26 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த அதிரடி வீரர் ரெய்னா 7 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
4-வது விக்கெட்டுக்கு டோனி- ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ஜடேஜா 24 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் கிளீன் போல்டானார். டோனி சிறப்பாக விளையாடி அரை சதத்தை கடந்தார். 5-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய பிராவோ 12 ரன்னுடனும், டோனி 58 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணி சார்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், மெர்வ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சேவாக்- உன்முக் சந்த் களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 2-வது பந்தில் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து சந்த் உடன் போதா ஜோடி சேர்ந்தார். சந்த் 16 ரன் எடுத்த நிலையில் பெவிலியின் திரும்பினார். அதன்பின் வந்த வார்னர் 44 ரன்களும், போதா 23 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் வந்த டெல்லி வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் மோர்கல் 3 விக்கெட்டும், மோகித் சர்மா, அஸ்வின், பிராவோ தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 15 போட்டிகளில் 11-ல் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment