Friday, May 17, 2013

ஜவுளிக்கடை, செருப்புக்கடை ஓப்பனிங் ஓவர் : படத்தயாரிப்பில் இறங்குகிறார் சினேகா?

தமிழ்நாட்டில் எந்த ஊரில் எந்த கடை திறந்தாலும் உடனே தனது கணவர் பிரசன்னாவையும் கூடவே கூட்டிக்கொண்டு போய் புன்னகை ததும்ப அந்தக்கடைகளை திறந்து வைத்துவிட்டு கணிசமாக பணம் சம்பாதித்து வந்த சினேகா புதிதாக பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படத்தயாரிப்பில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபகாலமாக தமிழில் சின்ன பட்ஜெட் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதையடுத்து இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கும் சினேகா இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்த தயாரிப்பு வேலையில் இறங்கியிருக்கிறார்.

அதனால் சமீபகாலமாக புதிய டைரக்டர்களிடம் மும்முறமாக கதை கேட்டுவரும் அவர், எதிர்பார்த்த கதை கிடைத்ததும் உடனடியாக படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்.

ஒருவேளை அந்த கதை அவருக்கே பொருத்தமாக இருந்தால் அவரே ஹீரோயினாக நடிப்பாராம், இல்லையென்றால் வேறு ஹீரோயினை நடிக்க வைப்பாராம்.

தற்போது பிரகாஷ்ராஜ் டைரக்‌ஷனில் “உன் சமையல் அறையில்” படத்தில் நடித்து வரும் சினேகா, சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை எப்படி எடுப்பது என்கிற ரகசியத்தை பிரகாஷ்ராஜிடமிருந்து தான் கற்று கொண்டாராம்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தும், இப்போது சொந்தமாக படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். ஆனால் ஸ்ரீகாந்த் தயாரிக்கும் படத்தில் அவர் தான் ஹீரோவாம். நண்பன், பாகன் என தொடர்ந்து சில ஹிட் படங்கள் கொடுத்தாலும் புதிய பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வராததால் இப்படி ஒரு ரிக்ஸ் எடுக்கிறார் ஸ்ரீகாந்த்.

எது எப்படியோ.., போட்ட காசை திரும்ப எடுத்தா சரிதான்....

No comments:

Post a Comment