டெல்லியில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவமனை டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிழக்கு டெல்லியில் உள்ள ஜெக பிரவேஷ் சந்திரா அரசு மருத்துவனையில் தலைமை மருத்துவ அலுவலராக நரேந்திர சிங் பணியாற்றி வருகிறார். அவரிடம் சிகிச்சை பெற வந்த 21 வயது பெண் நோயாளியிடம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.
அதன்படி அவரை மருத்துவமனைக்கு வெளியில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று, தூக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளார். அவர் மயங்கியதும், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தார். மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியான டாக்டரை சீலம்பூரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment