திருப்பரங்குன்றத்தில்3 அடி உயர மனிதருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த என்.வேடப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன், உலகுமுத்து தம்பதியினர் மகன் முத்துப்பாண்டிக்கும் (32),மதுரை தெற்கு பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், மகேஸ்வரி தம்பதியினரின் மகள் முத்துலட்சுமிக்கும்(27) திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி சன்னதியில் வைத்து திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு திருமணம் நடந்தது அவ்வளவு பெரிய விஷயமா என்றால் ஆம் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இருவருமே 3 அடி உயரமுள்ளவர்கள். முத்துலட்சுமி9ம் வகுப்பு வரையிலும், முத்துப்பாண்டி 7ம் வகுப்பு வரையிலும் படித்துள்ளனர். அவர்களுக்கு புதூர் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ்,வேடப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆவுடையப்பன், மதிமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் அ.வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment