பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா துவங்கி உள்ளது. ஹாலிவுட் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து நடிகர் - நடிகைகள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் துவக்க
விழாவில் பங்கேற்றார். `கேன்ஸ்´ திரைப்பட விழா நடுவர்கள் குழுவில் இந்தி நடிகை வித்யாபாலன் இடம்பெற்று உள்ளார். விழாவில் நமது பாரம்பரிய புடவை உடுத்திக்கொண்டு பங்கேற்றார். காதில் கம்மல் அணிந்திருந்தார். வித்யாபாலன் அணியும் புடவை மற்றும் ஆபரணங்கள் வெளிநாட்டினரை மிகவும் கவர்ந்துள்ளது.
அங்குள்ள போட்டோகிராபர்கள் விதம் விதமாக அவரை படம் எடுக்கின்றனர். ரசிகர்களும் வித்யாபாலனை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர். அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்கிறார்கள். `கேன்ஸ்´ படவிழாவில் ரஜினி பங்கேற்பார் என்றும் கோச்சடையான் படத்தின் டிரெய்லர் அங்கு வெளியாகும் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை ரஜினி `கேன்ஸ்´ படவிழாவுக்கு புறப்பட்டுச் செல்லவில்லை.
No comments:
Post a Comment