Thursday, May 16, 2013

பீச்சில் குத்தாட்டம் போட்ட அமலா பால்.


தமிழில் முன்னணி நடிகையான  அமலா பால், தற்போது தெலுங்கில் தன் கவனம் முழுவதையும் செலுத்தி வருகிறார். இருந்தாலும் தமிழிலும் முன்னணி நடிகர்களின் படங்களை வளைத்து போட்டுள்ளாராம்.
விஜய் ஜோடியாக தலைவா படத்தில் நடிக்கும் அமலா, இந்த படப் பிடிப்புக்காக சமீபத்தில் அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.
அங்குள்ள புகழ்பெற்ற போன்டி பீச்சில் ஏற்பட்ட அனுபவத்தைஅவரால் மறக்க முடியவில்லையாம்.
அவர் கூறுகையில், உலகின் மிகச் சிறந்த பீச்சுகளில் போன்டி பீச்சும் ஒன்று.
அடடா… பார்ப்பதற்கு எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்தேன்.
வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. ஏராளமான இந்தியர்கள் அங்கு இருந்தனர். குறிப்பாக தமிழர்கள் அதிகம் இருந்தனர்.
அவர்களுடன் தமிழில் பேசி அரட்டை அடித்தது வித்தியாசமான அனுபவம் என்கிறார் அமலா பால்.

No comments:

Post a Comment