Friday, May 17, 2013

மாதுரி தீட்சித்துக்கு ‘முத்தம்’ கொடுக்க டைரக்டருக்கு லஞ்சம் கொடுத்த ஹீரோ : பாலிவுட்டில் பரபரப்பு!

வர வர எதற்கெல்லாம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது. ஆமாம் பிரபல ஹிந்தி நடிகையை கிஸ் அடிக்க படத்தின் டைரக்டருக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்த ஒரு ஹீரோவின் சமாச்சாரம் பாலிவுட்டை பரபரப்பாக்கியிருக்கிறது.

ரன்பீர்கபூர் ஹீரோவாக நடிக்கும் 'ஏ ஜவானி ஹே திவானி' என்ற ஹிந்திப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'காக்ரா' என்ற குத்தாட்ட பாடலில் நடிகை மாதுரி தீட்சித்தின் நடனம் இடம்பெறுகிறது.

இந்த குத்துப்பாட்டில் மாதிரியுடன் இணைந்து டான்ஸ் ஆடிய அனுபவம் குறித்து ரன்பீர்கபூர் கூறியிருப்பதாவது :

மாதுரி தீட்சித் மிகவும் திறமை வாய்ந்த நடிகை. கொள்ளை அழகுடைய அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடியது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எனது இளமைக்காலத்தில் அவரை ஒருதலையாக காதலித்துள்ளேன். அவருக்கு திருமணம் நடந்தபோது நான் மனசு உடைந்து போய்விட்டேன்.

'ஏ ஜவானி ஹே திவானி' படத்தில் அவருடன் ஒரு பாட்டுக்கு நடனமாடும் சான்ஸ் கிடைத்தபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இந்த பாட்டுக்கான டான்ஸை பாராகான் அமைத்துள்ளார். இந்தப்பாடல் காட்சியில் மாதுரிதீட்சித்துக்கு எப்படியாவது முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சியை வையுங்கள் என்று படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜிக்கு எனக்கு தெரிந்த முறையில் லஞ்சம் தந்து வைக்கச்சொன்னேன். அதன்மூலம் இந்த பாடல் காட்சியில் மாதுரி தீட்சித்தின் கன்னத்தில் நான் முத்தம் கொடுத்தேன்.

இவ்வாறு ரன்பீர்கபூர் கூறியிருக்கிறார்.

ரண்பிர் கபூரின் அப்பா ரிஷி கபூரும், மாதுரி தீட்சித்தும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment