Friday, May 17, 2013

ஐயோ.. என்ட ஆபாச படங்களா...?

பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அதில் அவரைப் பற்றி ஆபாசமாகவும், மார்பிங் செய்த நிர்வாணப் படங்களை வெளியிட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 


நடிகை அஞ்சு அரவிந்த் கொச்சி போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது பெயரில் போலியான போஸ்புக் செயல்படுவதாகவும், அதில் தன்னை ஆபாசமாக சித்தரித்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த விசாரணையில், திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் அஞ்சு அரவிந்தை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததும், அஞ்சுவுக்கு இமெயில் மூ்லம் அடிக்கடி செய்தி அனுப்பி வந்ததும் தெரியவந்தது.  இதனால் கோபமடைந்த அஞ்சு அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். 

இதனால் கோபமடைந்த அசீம், போலியான பேஸ்புக்கைத் தொடங்கி அஞ்சு குறித்து ஆபாசமாகவும், மார்பிங் செய்த நிர்வாணப் படங்களையும் வெளியிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அசீம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment