இந்தியாவை சேர்ந்த 24 வயது பெண் டோஷா தாக்கர். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு சிட்னி அருகேயுள்ள கிராய்டன் பகுதியில் உள்ள பொது குளியலறையில் இருந்து அவர் வீட்டுக்கு சென்றார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற ஸ்டானி ரெஜினால்ட் (21) என்ற வாலிபர், டோஷா தாக்கரின் அறைக்குள் நுழைந்து அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.
பின்னர், இரும்பு கேபிள் ஒயரால் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றார். துணி சூட்கேசில் பிணத்தை வைத்து டாக்சியில் எடுத்துச் சென்று மெடோபேங்க் அருகேயுள்ள கால்வாயில் வீசிவிட்டு ஸ்டானி ரெஜினால்ட் தப்பிச் சென்றார்.
கால்வாயின் அருகே போகும் எண்ணெய் குழாய் பராமரிப்பு பணிகளை செய்யும் தொழிலாளர்கள் சூட்கேசில் பிணம் மிதப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
புலன் விசாரணை செய்த போலீசார், ஸ்டானி ரெஜினால்டை கைது செய்து அவன் மீது நியூ சவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு கொடுத்தனர்.
சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குற்றவாளிக்கு 45 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
‘இளம்பெண்ணை பல நாட்களாக குற்றவாளி தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளான். அவனது கம்ப்யூட்டரில் இந்திய பெண்கள் இடம் பெறும் ஆபாச படங்களும், கற்பழித்து கொலை செய்த முன்னாள் கிரிமினல்களின் வாக்குமூலங்களும் பதிவாகியுள்ளன.
எனவே, பல மாதங்களாக திட்டமிட்டு, கொடூரமான முறையில் ஒரு பெண்ணை கற்பழித்து, ஈவிரக்கமற்ற முறையில் குற்றவாளி கொலை செய்துள்ளார்.
தனது 19ம் வயதிலேயே இதைப் போன்ற மிருகத்தனமான குற்றத்தில் ஈடுபட்டதால் அதிகபட்ச தண்டனையாக 45 ஆண்டு சிறை தண்டனையை அவனுக்கு விதிக்கிறேன்.
இதில் 30 ஆண்டு (2043) வரை அவனை பரோலில் விடுவிக்கக்கூடாது என்றும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன்’ என சுப்ரீம் கோர்ட் நீதிபதி டெரெக் பிரைஸ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment