ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 62-வது லீக் போட்டி, இன்றிரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பட்டேல் மற்றும் தவான் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். பட்டேல் 14 பந்தில் 26 ரன் எடுத்த நிலையில், மலிங்கா வீசிய பந்தில் ராய்டுயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் வந்த விஹாரி, தவானுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். தவான் – விஹாரி ஜோடி சேர்ந்து 73 ரன்கள் குவித்தனர். தவான் 59 ரன்னில், ஜான்சன் வீசிய பந்தில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஒயிட், விஹாரியுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய ஒயிட் 23 பந்தில் 43 ரன்கள் குவித்தார்.
இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
179 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக தெண்டுல்கர் மற்றும் ஸ்மித் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஸ்மித் 21 ரன் எடுத்தபோது, சர்மா வீசிய பந்தில் கிளின் போல்ட் ஆனார்.சச்சினுடன் ஜோடி சேர்ந்து தினேஷ் கார்த்திக் விளையாடினார். பின்னர் காயம் காரணமாக சச்சின் வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மா களமிறங்கினார். கார்த்திக் 30 ரன் எடுத்தபோது அவுட் ஆனார். பின்னர் வந்த ராய்டுயும் 2 ரன்னில் வெளியேற, மும்பை 13.2 ஓவருக்கு 99 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பொல்லார்ட் – சர்மா ஐதராபாத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பொல்லார்ட் 20 பந்துகளில் 50 ரன்களை அடித்து அசத்தினார்.
இறுதியில் 6 பந்துகளில் 7 ரன் எடுக்க வேண்டிய நிலையில், பொல்லார்ட் 2 சிக்சர்களை அடித்து மும்பை அணியை வெற்றி பெறச்செய்தார்.
இதனால் 10 வெற்றிகளை பெற்று மும்பை இந்தியன்ஸ், 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் அடைந்தது.
சிறப்பாக விளையாடிய பொல்லார்ட், 27 பந்தில் 66 ரன்கள் ( 2 பவுண்டரி, 8 சிக்சர்) அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
No comments:
Post a Comment