Wednesday, May 15, 2013

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்!


இதைப் படிக்க வரும் நண்பர்களே! நீங்க ரொம்ப மனசு நொந்து படிக்க வந்தது தெரியுது.
பின்குறிப்பு - இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை.

1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது.

'நான் ரொம்ப நல்லவன் மச்சான். ஆனா, என்னை ஒரு பொண்ணு பார்க்க மாடிங்கது ... அவன் ஒரு பொறுக்கி ஆனா அவன் பின்னாடி ஓர பொண்ணுங்க மச்சான்' என்று சொல்வதை கேள்வி பட்டிருப்பிங்க.

காரணம்..?

பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது...
நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க? அவங்களுக்கு எம்ஜிஆர் பாதி நம்பியார் பாதி வேணும்... ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும் கொஞ்சம் லொள்ளு இருக்கணும்.

2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது...

யோசிச்சி பாருங்க... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா அவ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி

அப்புறம் ஸ்கூல், காலேஜ் என்று பல தடைகளை தண்டி வரும் பொண்ணுங்களிடம் நீங்க அதைபோல 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க' என்று சொன்னால், நீங்க கண்டிப்பாக நூறோட நூத்திஒண்ணு:-)

அதுக்காக, 'நீங்க அசிங்கமா இருக்கீங்க' என்று சொலி அடி வாங்கிடாதீங்க...
சும்மா ஜாலி பண்ண 'ஹே நீ இன்னிக்கு இந்த டிரஸ் சும்மா அழகா இருக்க...'


அந்த பொண்ணு நன்றி சொல்லும்போது... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாதா ஹி ஹி:-)



3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை. உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... (மொக்கை இல்லை)

பொண்ணுங்க பொதுவாவே சுமாரான ஜோக்குக்குக் கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க... நல்ல காமெடி பண்ணனும், அதுவும் அவங்கள புண்படுத்தாம...

உங்க அப்பா அப்படியே விரும்பாண்டி கணக்கா, எங்க ஊரு அய்யனாரு மாதிரி மீசை வச்சி இருக்காரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது... நீங்க நல்ல ஃபிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும்.
ஃபிரெண்ட்ஸ் ஆயிட்ட அப்புறம்... 'கொரில்லா எப்படி இருக்காரு' என்று கூட கேட்கலாம். அதுக்கும் கெக்க பிக்கனு சிரிப்பார்கள்... (நான் சொல்லி இருக்கேன்) அப்புறம் உங்க அப்பாவ பத்தி தான் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம்...

4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ, விரும்புவதோ கிடையாது. சூப்பர் ஃபிகரும், சுமாரான பையனும் சுத்துறத நிறைய பார்த்து இருப்பீங்க. காரணம்... உளவியல்!

அவியல் இல்லை பாஸ்... உளவியல்!

இப்படி நமக்கு ஒரு பொண்ண பார்த்தா... அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு கெமிஸ்ட்ரி.. ஃபிசிச்ஸ்.. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாருங்க... அது மாதிரி பீலிங் பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்தா வராது..

அவங்களுக்கு பசங்களோட body language பார்த்தா சும்மா ஒரு ஃபீலிங் வரும்... சும்மா சூப்பரா பேசுறது, ஸ்டைல் உங்க பாடி, கை, கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு ஃபீலிங் கொடுக்கும்...

அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சீவுறது, ஸ்டைல் பண்ணுறது, பந்தா பண்றது.. கண்டிப்பா புடிக்காது.
நீங்க நீங்களா இருங்க... எதார்த்தமா இருங்க. ஏன்னா, அவங்க ரொம்ப புத்திசாலி அப்படினு நினைப்பு அவங்களுக்கு!

5. எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க... உங்கள ரொம்ப பிடிக்கும். அதுக்கு அப்புறமா ஃப்ரெண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷயம்...

பொண்ணுங்க பசங்க கிட்ட பேசுறத தவிர்கறதே இந்த விஷயத்துனால தான்.

அவங்க அப்பா, அம்மா க்ளோஸ் பிரெண்ட்ஸ் என்று எல்லாரும் லவ்வுக்கு எதிரி...

'எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி ஃபிரெண்ட்ஷிப்' என்று நல்லா பேசி புரிஞ்சிகோங்க...
அப்புறம் சினிமால வர்ற மாதிரி 'ஐ லவ் யூ' எல்லாம் சின்ன பசங்க, ஸ்கூல் பசங்க தான் சொல்லுவாங்க... அப்படி சொல்ல தேவையில்லை. ஒரு தருணத்துல நீங்க இல்லாம அந்த பொண்ணும், அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது தெரிஞ்சு அதுவே லவ் என்று மாறிடும்...


எக்ஸ்ட்ரா டிப்ஸ் :

மொத மொத பார்க்கிற பொண்ணுங்ககிட்ட பேச வேண்டிய வசனம்

"நீங்க ரொம்ப படிப்ஸோ?"

"ஏன் கேக்குறீங்க?"

"இல்லை உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதே அதான் கேட்டன்."
:-) சிரித்து விட்டு, "நாங்க ரொம்ப படிப்ஸ் இல்லை" என்று பதில் வரும் :-)

No comments:

Post a Comment