இந்திய அணித்தலைவர் டோனியைப் போல அவரது மனைவி சாக்ஷி சிங்குக்கும் தனியாக பெரும் ரசிகர் கூட்டமும், சங்கமும் வந்து விடும் போலத் தெரிகிறது.
அந்த அளவுக்கு ஒவ்வொரு முறையும் அவர் ஏதாவது செய்து அனைவரையும் கவர்ந்திழுத்து விடுகிறார்.
தனது அழகான மேனரிசங்களால் ஐ.பி.எல் போட்டியைக் காண வரும் ரசிகர்களைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் சாக்ஷி. நேற்றைய போட்டியில் சென்னை ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு விட்டார்.
மனம் மயக்கும் மனதைக் கொள்ளை கொள்ளும் மல்லிகைப் பூவை கையில் சுற்றியபடி மைதானத்திதிற்கு வந்திருந்த சாக்ஷி மீதுதான் அத்தனைப் பேரின் கண்களும் இருந்தன.
மைனர்கள் கையில் மல்லிகைப் பூவை சுற்றிக் கொண்டு சுற்றுவதுபோல சாக்ஷி நேற்று தனது கையில் மல்லிகைப் பூவை வாங்கி சுற்றி விட்டிருந்தார்.
மேலும் அந்த மல்லிகைப் பூவை அடிக்கடி நுகர்ந்து பார்த்து அதன் வாசத்தை அனுபவித்தார்.
மல்லிகைப் பூவை அடிக்கடி தனது விரல்களால் தடவிப் பார்த்தபடியும், தனது முகத்தில் வைத்து செல்லமாக உரசியபடியும் மல்லிகையின் சுகந்தத்தை அனுபவித்தார் சாக்ஷி.
மல்லிகையை கையில் வைத்திருந்ததாலோ என்னவோ, டோனி துடுப்பெடுத்தாடும்போதெல்லாம் உற்சாகமாக ஊக்கப்படுத்தியபடி இருந்தார் சாக்ஷி.
ஒருமுறை மொஹித் சர்மா வீசிய பந்தைப் பிடிக்க முயன்ற டோனிக்கு பந்து தாடையில் பட்டு விழுந்தது. இதனால் லேசான வலியால் துடித்தார் டோனி. ஆனால் அதை விட வேகமாக துடித்தார் சாக்ஷி.
சாக்ஷிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் மன்றம் வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
No comments:
Post a Comment