சுமித்ரா கண்முன் கிளுகிளுப்பான காட்சியில் அவரது மகள் நட்சத்திரா நடித்த காட்சி படமானது.நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திரா. இவர் தமிழில் ‘டூ என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது மலையாளத்தில் ‘வில்லேஜ் கய்ஸ் என்ற படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறார். இதில் சுமித்ராவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்துக்காக ஹீரோவுடன் கிளுகிளுப்பு காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஷூட்டிங் தளத்தில் சுமித்ராவும் இருந்ததால் அவர் கண்முன் காட்சிகள் படமாக்க இயக்குனர் தயக்கம் காட்டினார்
நட்சத்திராவிடம் இது பற்றி இயக்குனர் கேட்டபோது, இந்த காட்சியில் நடிப்பதற்கு எனக்கு தயக்கம் இல்லை. அம்மா ஒன்றும் சொல்ல மாட்டார்கள். நீங்கள் சீனை எடுங்கள் என்று இயக்குனருக்கு தைரியமூட்டினார்.
பின்னர் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது யூனிட்டார் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இது பற்றி சுமித்ராவிடம் கேட்டபோது, ‘ஹீரோவுடன் நட்சத்திரா நடித்த நெருக்கமான காட்சி படமாக்கப்பட்டது உண்மைதான்.
நான் ஹீரோயினாக நடித்த காலத்தில் எனது தந்தை துணைக்கு வருவார். அப்போது ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தர்மசங்கடமாகிவிடும்.
இதையறிந்து கொண்ட தும் இயக்குனரே எனது தந்தையிடம் சென்று நீங்கள் கொஞ்சம் மற்றொரு அறையில் இருங்கள் என்று வெளியில் அனுப்பிவிடுவார். அதன்பிறகு அக்காட்சியில் நடிப்பேன்.
ஆனால் இப்போது யாரும் அதுபற்றி கவலைப்படுவதில்லை. அதற்கு காரணம் இன்றைய இளையதலைமுறையினர் எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment