நயன்தாராவும், டாப்ஸியும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். இருவரும் அஜீத் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது பழக்கம் ஏற்பட்டு நட்பானார்கள். நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கிய பிறகு நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவதை தவிர்த்து வந்தார்.
ஆர்யாவுடன் மட்டும் பழக்கம் வைத்து இருந்தார். அவர் வீட்டில் போய் விருந்தும் சாப்பிட்டார். இருவரும் காதலிப்பதாகவும் கிசு கிசுக்கள் பரவின. இந்த நிலையில் முதல் தடவையாக டாப்ஸியை தோழியாக ஏற்றுள்ளார்.
சமீபத்தில் அஜீத் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி குலுமனாலியில் படமானது. இதில் இருவரும் பங்கேற்று நடித்தார்கள். அப்போது ஒன்றாகவே இருந்தார்கள். சேர்ந்தே சாப்பிட்டார்கள். தோள்மேல்கை போட்டு போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment