Thursday, May 16, 2013

ரெய்னா - ஸ்ருதி நெருக்கம்: நட்சத்திர ஓட்டலில் ரகசிய சந்திப்பு


தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.
இப்படி பல கிசு கிசுகிசுக்களில் சிக்கி வலம் வரும் நடிகை ஸ்ருதி தற்போது கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக ரெய்னா உள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார்.
அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர் அடிக்கடி இருவரும் சந்தித்து பேசி தங்களது நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாகவும் அத்துடன் நிற்காமல் இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக கூடிக்குழாவி விருந்து சாப்பிட்டு மகிழ்வதாக செய்தி பரவியுள்ளது.

No comments:

Post a Comment