Friday, May 17, 2013

Http, Https என்ன வித்தியாசம்?




 
   சாதாரணமாக நம்முடைய உலவியில் ஒரு வலைத்தளத்தைக்காண Uniform Resource Locator என்று சொல்லக்கூடிய URL கொடுத்து நாம் விரும்பும் வலைத்தளத்திற்குச் செல்வோம்.   இந்த URL -ல் உள்ள முதன்மைப் பகுதி http. அல்லது https எனத்தொடங்கும்.  இவ்விரண்டும் ஒன்றேதானா?  அல்லதுவெவ்வேறா?  இரண்டிற்குமுள்ள வித்தியாசம்தான் என்னஎன்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்



  முதலில் Http என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்


     http என்பது Hyper text transfer protocol என்பதன் சுருக்கமே httpஎன்பது


  இதனுடன் secure என்ற வார்த்தையும் சேர்க்கும்போது Hyper text transfer protocol secure என்றாகிவிடும்இதுவே https என்றுகுறிப்பிடப்படுகிறது.




    இணையப்பக்கங்களை பயன்படுத்தும்போது httpஎனத்தொடங்கும் பக்கங்கள் நாம் உள்ளிடும் தகவல்களைமற்றவர்கள் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சாத்தியங்கள்இருக்கிறது


    https எனத்தொடங்கும் வலைத்தளங்களில் உள்ளிடப்படும்தகவல்களைப் பிறர் அணுக முடியாது.  இது முற்றிலும்பாதுகாப்புடையதாகும்.


இதுதான் இவ்விரண்டிற்குமுள்ள வித்தியாசம்.

  
  உதாரணத்திற்கு உங்களுடைய G-mail கணக்கைத்திறக்கும்போது உங்களுடைய அட்ரஸ் பாரில் https://www.gmail.com என்றிருந்தால்அது முற்றிலும்பாதுகாப்பானதுதவிர http://gmail.com எனத்தொடங்கினால்அத்தகைய தளத்திலிருந்து உங்களுடைய தகவல்களை பிறர்அணுக வாய்ப்பிருக்கிறது


    சாதாரணமாக வலைத்தளங்களில் நம்முடைய சொந்ததகவல்களை பகிர்வதை முடிந்த வரையில் தவிர்த்துக்கொள்ளவேண்டும்இணையம் மூலம் வர்த்தகம் செய்வோர்,பொருட்களை வாங்குவோர்மற்றும் பல தேவைகளுக்குதங்களுடைய கிரடிட் கார்ட்டெபிட் கார்ட் (Credit card, debit card)போன்றவற்றைப் பயன்படுத்தும்போது முழு கவனத்துடன்செயல்படவேண்டும்


   இணையத்தின் வழியாக பண பரிமாற்றம் (Money transfer)செய்யும்போது இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்நாம்பண பரிவர்த்தனை செய்யும் தளம் பாதுகாப்பானதுதானா என்றுநமக்கு குறிப்பிட்டு அடையாளப்படுத்தக்கூடியவைதான் Hyper text transfer protocol secure ஆகும்


    இவ்வாறான வணிக தளங்கள்வங்கி தளங்கள் (Business sites, banking sites) தளங்களைப் பயன்படுத்தும்போது ஒன்றுக்குஇருமுறை நன்றாக அட்ரஸ் பாரில் உள்ள URL- (Address bar)கவனித்துஅதில் https:// என ஆரம்பிக்கிறதா என சரிபார்த்தபின்னரே இன்டர்நெட் பேங்கிங் (Internet Banking), online purchaseஆகியவைகளில் ஈடுபடவேண்டும்.

No comments:

Post a Comment