Wednesday, May 15, 2013

மெரினா கடற்கரையில் ஆசிய-பசிபிக் பீச் வாலிபால்: 17-ந்தேதி தொடக்கம்


இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடன் சென்னை மெரினா பீச் வாலிபால் கிளப் சார்பில் தந்தி டி.வி. ஆதரவுடன் ஆசிய-பசிபிக் ஜூனியர் பீச் வாலிபால் போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சென்னையில் நடத்தப்படுகிறது.
ஆசிய-பசிபிக் ஜூனியர் பீச் வாலிபால் போட்டி மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பின் புறத்தில் வருகிற 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
ஹலோ எப்.எம்., ஒ.என்.சி.சி. வேலம்மாள் சர்வதேச பள்ளி ஆகியவையும் இந்தப் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்கின்றன.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஈரான், கஜகஸ்தான், இந்தோனேசியா, ஓமன், துர்க்மெனிஸ் தான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.
ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்அவுட் அடிப்படையில் போட்டி நடைபெறும். இதையொட்டி இரண்டு ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3மணி முதல் இரவு 11 மணி வரையிலும் போட்டி நடைபெறும்.
இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் யோகராஜ்ராஜ்குமார், சங்கர்மகேஷ் குமார், ஆரோன் பெரேராஜாவீத்கான் ஆகிய ஜோடிகளும், பெண்கள் பிரிவில் தீபிகா ஈஸ்வரி, நிவ்யாபானுப் பிரியா, அனிலா சாவியோ அஸ்வதி, அனுஷாஆதிரை ஆகிய ஜோடிகளும் பங்கேற்க உள்ளன. போட்டிகளை டி.டி. ஸ்போர்ட்ஸ் மற்றும் தந்தி டி.வி. ஒளிபரப்பு செய்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் 6 அணிகள் குரோஷியாவில் அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெறும் உலக ஜூனியர் பீச் வாலிபால் போட்டிக்கு தகுதி பெறும்.
மேற்கண்ட தகவல்களை போட்டி ஒருங்கிணைப்பு குழு இயக்குனர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார். இந்திய கைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ரீதரன், தந்தி டி.வி.யின் சி.இ.ஓ. சந்திரசேகர், தந்தி டி.வி. மார்க்கெட்டிங் துணைத்தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment