Wednesday, May 15, 2013

நடந்தது பிரஸ்மீட்டா, அல்லது விஜய்டிவி ரம்யாவின் 'ரியாலிட்டி ஷோ'வா? : மரியானில் நடந்த கேலிக்கூத்து!

பிரஸ்மீட் என்ற பெயரில் எல்லா முக்கிய சினிமா ரிப்போர்ட்டர்களையும் வரவைத்து விட்டு, அவர்களை கேள்வி கேட்க விடாமல் தானே தொடர்ச்சியாக பல கேள்விகள் கேட்டு ‘மரியான்’ ப்ரஸ்மீட்டை ரியாலிட்டி ஷோ போல மாற்றினார் விஜய்டிவி ரம்யா.
நேற்றுமாலை 6 மணியளவில் ‘மரியான்’ படத்தின் பிரஸ்மீட் என்று சொன்னதும் நாம் அங்கு சென்றோம், கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஹோட்டலில் இடம் பத்தாமல் போக, பாதி சினிமா ரிப்போர்ட்டர்கள் பிரஸ்மீட் நடந்த ஹாலை விட்டு வெளியில் தான் நின்று கொண்டிருந்தார்கள்.

‘வந்தே மாதரம்’ மியூசிக் ஆல்பம் புகழ் பரத்பாலா தமிழில் முதன் முறையாக டைரக்ட் செய்யும் படத்தின் பிரஸ்மீட் என்பதால் கிட்டத்தட்ட எல்லா மீடியாக்களையும் அழைத்திருந்தார்கள். கடைசியில் தேவையில்லாமல் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினியை முன்னிலைப்படுத்தி பிரஸ்மீட்டை கேலிக்கூத்தாக்கியது தான் மரியானின் மிச்சமாக இருந்தது.

ஆமாம், பிரஸ்மீட் என்று சொல்லிவிட்டு பத்திரிகையாளர்களை கேள்விகளே கேட்க விடாமல், டைரக்டர் பரத்பாலா பக்கம், பக்கமாக எழுதிக் கொடுத்த கேள்விகளை மட்டுமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி விஜய்டிவி ரம்யா ஹீரோ தனுஷ், டைரக்டர் பரத்பாலா,மியூசிக் டைரக்டர்ட் ஏ.ஆர்.ரஹ்மான், ஹீரோயின் பார்வதி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனால் டென்ஷனான பல முன்னணி பத்திரிகளை நிருபர்களின் உச்சகட்ட டென்ஷனுடனும், முணுமுணுப்புக்களுடனே அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

மரியான்’ படத்தின் மிகப் பெரிய ஹைலைட்டே ஏ.ஆர். ரகுமான் தான். ஏற்கெனவே ரிலீஸாகிவிட்ட படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, வழக்கம் போல இயல்பாகவே பேசினார் ரகுமான்.

“பரத்பாலா கூட படம் பண்றது ஒரு எக்ஸ்கர்ஷன் போற மாதிரி. எதை எடுத்தாலும் இன்னும் நல்லா பண்ணணும்னு நினைக்கிறவரு. 25 வருஷத்துக்கு முன்னாடியே அவர் எடுத்த விளம்பரப் படங்கள் வேற ஒரு ரேன்ஞ்ச்ல இருக்கும்.

பரத் பாலா கூட படம் பண்ணணும்னு ஒரு கன்டிஷன் இருக்கு. அவர் படம் இயக்கும் போது நான்தான மியூசிக் பண்ணணும்னு.
இசையமைக்கும் போது இந்த படத்தை முதல்ல பார்த்ததுக்கும்,அப்புறம் போகப் போக பார்க்கிறதுக்கு ரொம்ப ‘டைட்டா’ இருக்கு.

செல்வராகவன், தனுஷ், யுவன் மூணு பேரும் நிறைய ஒர்க் பண்ணியிருக்காங்க. அதுல ஒரு ரேப்போ இருக்கும். அவங்க பாடல்களையெல்லாம் நான் பார்த்திருக்கேன். அதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். ‘கடல் ராசா’ பாட்டுக்காக என்னோட டிராக் ஒன்னு இருந்தது. நான் பார்க்கும் போதெல்லாம் அது ஒட்டாமலே இருந்தது. அந்த பாட்டுக்கு யுவன் பாடினால் நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணோம். வந்து ஒரு மணி நேரத்துல பாடி முடிச்சிட்டு போயிட்டாரு’’, என்றார்.

மேலும் ரம்யாவின் அத்துமீறலையும் மீறி ஏ.ஆர்.ரஹ்மானிடன் ஒரு நிருபர் கேள்வி கேட்டார். குறிப்பாக தமிழ்ப்படங்களுக்கு அதிகமாக இசையமைப்பதில்லையே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ அப்படியெல்லாம் இல்லை. நான் பிஸியாக இருப்பது உண்மை தான். ஆனால் நல்ல ஸ்டோரிகள் தமிழில் அமையும் போது அந்தப்படங்களுக்கு நான் கண்டிப்பாக இசையமைக்கிறேன். நல்ல கதை என்றால் புதுமுக டைரக்டர் என்று கூட நான் பார்ப்பதில்லை

என்றவரிடம், யுவன்ஷங்கர்ராஜா உங்களுடைய இசையில் பாடியதுபோல, நீங்களும் அவருடைய இசையில் பாடுவீர்களா..? என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ஆமாம் யுவனை நான் இசையமைக்கும் படத்தில் பாட வைக்கும் ஐடியா நீண்டநாட்களாக இருந்தது. அது இப்போது தான் அமைந்தது. அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக போய்ப் பாடுவேன்.

மொத்தமாகவே இப்படி ஆக்கப்பூர்ம்வமாக அமைந்திருக்க வேண்டிய ப்ரஸ்மீட் ரம்யாவின் ஓவரான டாமினேஷனால் சப்பென்று ஆகிவிட்டது. அதுசரி ப்ரஸ்மீட்டுக்கு எதுக்கு இந்த தொகுப்பாளினி சமாச்சாரம்..? என்னமோ போங்கப்பா.

No comments:

Post a Comment