Friday, July 24, 2009

ராதா மகள் கார்த்திகா தமிழில் நடிக்க வருகிறார்



ராதா மகள் கார்த்திகா தமிழில் நடிக்க வருகிறார்.

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் சகோதரிகளான ராதாவும் அம்பிகாவும்.. திருமணத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டனர். சிறிய இடைவெளிக்குப் பிறகு அம்பிகா நடிக்க வந்தார். நடித்துக்கொண்டும் இருக்கிறார். ராதா மீண்டும் நடிக்க வரவில்லை. ஆனால் தன் மகள் கார்த்திகாவை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டிவந்தார்.

கார்த்திக்குடன் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தான் அறிமுகமானதை போல், அவருடைய மகனான கவுதம் ஜோடியாக தன்னுடைய மகள் கார்த்திகாவை களம் இறக்க வேண்டும் என எண்ணியிருந்தார் ராதா. கவுதம் தற்போது படித்து வருவதால் திரைக்கு வர சிறிது காலம் ஆகும். அதனால் கார்த்திகா தெலுங்கு படமான ‘ஜோஷ்’ ஷில், நாகார்ஜூனா மகன் நாகா சைதன்யாவின் ஜோடியாக அறிமுகமாகிறார் .

இப்படத்தைத் தொடர்ந்து தமிழுக்கும் வருகிறார் கார்த்திகா.

No comments:

Post a Comment