ரீல் லைப் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடஙங்கியிருக்கும் விக்ரம், அதன் மூலம் சிறந்த படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். முதலில் சசிகுமார் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார். இதில் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
இதுகுறித்து விக்ரம் கூறுகையில்,
“சசிகுமார் சேது படத்தில் உதவி இயக்குநராக இருக்கும்போதே தெரியும். சுப்ரமணியபுரம் படத்தின் பாடல் வெளியீட்டுக்கு அழைப்பதற்காக என் வீட்டிற்கு வந்த சசிகுமார், கண்கள் இரண்டால் பாடல் காட்சியைப் போட்டுக்காட்டினார். அப்போதே அவருடைய கிரியேட்டிவிட்டியைப் பாராட்டினேன்.
அந்தப் பாடலின் தாக்கத்தால் அவர் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தைப் பிடிப்பார் என நினைத்தேன்.
“உங்களைப் போன்ற இயக்குநரைத்தான் தேடினேன். நாம் இணைந்து படம் பண்ணுவோம்” என்று சொல்லி அட்வான்ஸ் கொடுத்தேன். “படம் ஹிட்டானால் பண்ணலாம்” என்று அவர் சொன்னார். “ஹிட்டாகிறதோ இல்லையோ, கண்டிப்பாகப் படம் பண்ணலாம்” என்று சொன்னேன்.
இதையடுத்து இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய அடுத்தப் படக் கதையும் வித்தியாசமான, புதுமையான கதைதான். அதை நானே தயாரிக்கிறேன். அவர் இயக்குகிறார். இன்னும் இரு மாதங்களில் படப்பிடிப்பு துவங்கும்” என்றார் விக்ரம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete