ரஜினியின் வாழ்க்கை தலைவர் என்கிற பெயரில் குறும்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்த இதற்கான விழாவில் தலைவர் டிவிடி யை ரஜினியே வெளியிட்டு பாராட்டினார்.
இந்த குறும்படத்தை தயாரிப்பாளர் கவின் சக்கரவர்த்தி தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அவர், ரஜினியின் திரை நுழைவு முதல் தற்போது வரை பதிவு செய்துள்ளார். மேலும் ரஜினி நடித்த முக்கிய படங்களின் காட்சிகள், பாடல், விழாக்களில் ரஜிய பேசிய உரைகள், வெற்றிப்பட்டியல், ஏழைகளுக்கு செய்யும் நற்பணிகள் போன்றவற்றையும் இணைத்துள்ளனர்.
இந்த குறும்படம் ரஜினியின்முழு ஒப்புதலோடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்பட டிவிடியை வெளியிட்டு ரஜினி பேசுகையில், கவின் கார்த்திக்கு தன்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொண்டார்.
தலைவர் குறும்படம் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வருகிறது.
No comments:
Post a Comment