Friday, July 24, 2009

‘லக்’ கி பெண் ஸ்ருதி கமல் பேட்டி


மல் மகள் ஸ்ருதி நடித்துள்ள இந்தி திரைப்படம் லக் இன்று வெளியானது. அவருக்கு ஜோடியாக(அமீர்கானின் மருமகன்) இம்ரான்கான் நடித்துள்ளார். படம் ஹிட் என்று சொல்லி விட்டார்கள்.

விறுவிறுப்பான படத்தில் சஞ்சத் தத், மிதுன்சக்கரவர்த்தி போன்ற அனுபவசாலிகளுடன் நடித்துள்ளஸ்ருதி நடிப்பில் சோகை போகவில்லை என்றும் வசன உச்சரிப்பில் மட்டும் கொஞ்சம் கூடுதல்கவனம் செலுத்தவேண்டும் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் லக் திரைப்படம் குறித்து மும்பையில் அளித்த பேட்டி வருமாறு

“லக்” படத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். இப்படத்தை இயக்குனர் சோகம் ஷா

பிரமாண்டமாக எடுத்துள்ளார். கதை நன்றாக இருப்பதால் படம் மிகப் பெரிய வெற்றி பெறும்.

நான் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை கமல் நன்றாக ஊக்கப்படுத்தினார். நான் ஒரு நடிகையாகஉருவானதற்கு அவர்தான் காரணம். அவரது நடிப்பு திறமையை கண்டு நான் பல தடவை பிரமித்துப்போய் இருக்கிறேன்.

குள்ளர் வேடத்தில் நடிப்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அவர் சிறந்த உழைப்பாளி.

அவரிடம் இருந்துதான் நான் கடின உழைப்பு, விடா முயற்சியை கற்று கொண்டேன்.

அவர் ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஓயமாட்டார். நான்

‘ஹே ராம்’ படத்தில் அப்பாவுக்கு காஸ்டியூம் டிசைனராக வேலை பார்த்தேன். ஆனால் அந்த படத்தை

சில பத்திரிகைகள் மோசமாக விமர்சனம் செய்திருந்தன. அதைப்பார்த்த போது எனக்கு மிகுந்த

வருத்தமாக இருந்தது.

சிறு வயதில் நான் அப்பாவிடம் மியூசிக் ரிக்கார்டிங் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று அடம்

பிடித்தேன். அப்போது அவர் என்னை இளையராஜா சாரின் ரிக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்துச்

சென்றார்.

அப்போது என்னைப் பார்த்த இளையராஜா இவள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாடகியாக வருவார்

என்று கூறினார். அதற்கு அப்பா எதை வைத்து சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்

பெயரிலேயே ஸ்ருதி இருக்கிறதே என்றார். இளையராஜாவின் அந்த பாராட்டை ஒரு போதும் மறக்க

முடியாது.

என் அப்பா இதுவரை என்னை ஒரு தடவை கூட திட்டியது இல்லை. அந்த அளவுக்கு நான் அவரிடம்

நடந்து கொண்டதும் இல்லை. என் மீது அவர் முழு நம்பிக்கை வைத்துள்ளார். அவரது நம்பிக்கை வீண்

போகாது” என்றார்.

முதல் படமே ஹிட்டாகிவிட்டதால் ஸ்ருதி ‘லக்’கி பெண் தான்.

No comments:

Post a Comment